Friday, May 30, 2014

விஞ்ஞான காதல்...

இதோ.. தனிமையில்
சடத்துவ வாயுவாய் நான் மட்டும்....

முதல் பார்வை
அடிப்படை சுரமாய்
நெஞ்சில் பிரதிபலிக்க..
அவள் எண்ண அலைகள் மட்டும்
என் காதலை காலிக் கொண்டிருந்தன திருசியமாய்...

கதோட்டு கதிராயும்
நேர்கோடாயும் இருந்த நெஞ்சை
வலஞ்சுளியாய் திருப்பம் எடுத்தாள் பாவி...
முழு வட்டமாய் நெஞ்சம் மையமாய் தஞ்சம்...
ஆக தொடலியாய் என்
பறிபோன சுதந்திரம்....

விசுறு பம்பியாய்
கண்கள் காண
நெஞ்சத் தளவாடியில் அவளின் 1000 விம்பங்கள்..

முடிவிலியில் தேட
காணவில்லை தேவியவள் தெய்வ முகம்!!
ஓ...
கொஞ்சம் கொஞ்சம் உறிஞ்சிக் கொண்டதோ
நெஞ்சத் தளவாடி...

மூடிய பொருளில்
சடத்துவ திருப்பமாய்
அவளை மட்டும்
கொண்ட நெஞ்சம்..
அவள் u.v பார்வையில்
ஒபிற்றலாய்
வளைத்தெடுக்கப்பட்டது!!!
விதி கண்ட வலியிலும் சுகம் காண்கின்றேன்..
விளைபொருளுக்காய்..

என் கண்ணில்
நீரை இடம்பெயர்க்க...
அழகிய நெஞ்சை கீறுகிறாள்
சுரமானியாய்.....
ஆக
அவள்முன் எளிய ஊசலாய் நான்!!

அவள்
தயாரிப்பாளர்
தமிழில் தந்தையாம்...
பொருத்தம் பார்த்த பின்
எடுகோள் முன்வைக்கிறார்
திருமணத்திற்கு
காதல் நிபந்தனையில் தாக்கம் இல்லையாம்....

உன் பின்னால்
அலைவு நிகழ்த்தியத்தும்
உனக்காய்
என்னை செப்பம் செய்ததும்
இன்று
வெறும் வேடிக்கையாய்
எனக்கு!!!!

இன்று
காரணிப்படுத்த
அன்றயதும்
இன்றயதும்
தேறிய விளைவு
பூச்சியம் தான்...
சமப்படுத்தாத தாக்கமாய்
என்

"காதல்"

No comments:

Post a Comment