Thursday, May 29, 2014

இவளும்...

இதுவும் ஒரு காதல் கவிதை தான்....
எனக்கு பதினாறு..
அவள் வயதை கேட்கவில்லை நான்
பதினாறை மிஞ்சிடுமோ - என்ற 
பயமாக கூட இருக்கலாம்...!!!

மாலை வகுப்பு..
சார் ஐ வற்புறுத்தி வைத்து கொண்டது...
மஞ்சளா நீலமா,
சட்டையில் பட்டிமன்றம்...
கண்ணாடி முன்னின்று
சீவிய தலை கோதி விட்டு...
அப்பா பாக்கெட்..
எதனை நூறுகள் இருந்தாலும்
ஐம்பதை காவிக்கொண்டு..
வகுப்பு விஜயம்!!!

வருவாள்..
இரட்டை ஜடை கூந்தல்,
கீழ் விட்டு மேலிழுத்த துப்பட்டா..
மூக்கை விட பெரிய மூக்குத்தி..
அவளுக்கென்றே பிரம்மன் செய்த இரு...

கண்கள்...

பாடத்தை மறக்கடிக்கும் சிரித்த வதனம்..
தொண்ணூறு பாகையில் தோழியருடன் அரட்டை..
வலிக்காமல் சீவுவாள் பென்சிலை...

அவளங்கு வந்தபின்..
அவள் அறியாது அவளை நோக்க வேண்டும்..
அதுதான் அன்றைய நாட்களில்
எனக்கும் எனக்கும் ஒப்பந்தம்...

மூன்று மணிநேரம் தடையின்றிய
தேவாமிர்தம்..
முடிவிற்கு வரும்..
நெஞ்சுக்குள் மணியோசை கேட்கும்..
அதைதான் வகுப்பு முடிவு சமிக்ஞை
என்பான் நண்பன்....

சைக்கிளில் வருவார் அப்பா...
ஏறியமர்ந்து திரும்பிப்பார்ப்பாள்... 
ஏதுமறியாது எச்சில் விழுங்குவேன்..
அது மட்டும் தான் ஞாபகம்..

பொது பரீட்சை முடிய
காணவில்லை தேவி முகம்..
நிமிடங்கள் வருடங்களானது..
வீடு வெறிச்சோடியது...

கொண்ட காதலை
கூறவில்லை ஒருபோதும்..
வேதனையில் மனம் கனகனத்தது...
கண்ணீர் கண்களை முட்டியது...

மீண்டும் ஒருத்தி..
எடையிலும் நடையிலும் உடையிலும்
அவளைவிடவும் தூள்.. 

" மச்சான்.. யாரு டா இவ??? "
அருகிலிருந்த  நண்பனை கேட்டேன்...

"மச்சான் அப்போ அவ???"

"விடு மச்சான்.. அவ கேரக்டர் மோசம் டா.. கழட்டிவிட்டுட்டேன்... "

#கண்ணால் பார்த்து பலபேரை கழட்டி விட்டவர்களில் நானும் ஒருவன்..

No comments:

Post a Comment