Thursday, May 29, 2014

அவள் பெயர் சஹானா...

சஹானா அவள் பெயர். 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி அவளிடம் காதலை சொன்னது. உடனே "ஓ கே" சொல்லிவிட்டாள். நாட்காட்டி மட்டும் 2012 ஏப்ரல் 13 என்று நாளை காட்டியது.

"ஹேய்.. இன்னிக்கு தான் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.. Facebook ல Relationship Status Update பண்ணட்டுமா??" அந்த சந்தோஷத்தில் நான் கேட்ட கேள்வி.

"லூசா உனக்கு??? வேணாம்ப்பா.. என்னோட அண்ணா அக்கா ரெண்டு பேரும் அதுல இருக்காங்க... பாத்தா அவ்ளோதான்..." கண்களால் கெஞ்சினாள்.

"சஹானா... நம்ம Love அ என் Friends கிட்ட சொல்லட்டுமா??" ஏக்கத்தோடு கேட்டேன்.

"டேய் இப்போ உனக்கு என்ன பிரச்சன?? வேணாம் டா.. அப்புறம் அவங்கெல்லாம் என்ன ஒருமாதிரி பாப்பாங்க.. என் Friends க்கு தெரிஞ்சா வீட்ல சொல்லிருவாங்க.." செல்லமாய் சிணுங்கினாள்.

ஒரு பண்டிகை நாள்...

"வாரியா ஷாப்பிங் போவோம்???" அன்பான கட்டளை விடுத்தேன்.

"விளையாடறியா நீ??? எங்க பாத்தாலும் என் சொந்தக்காரங்க இருக்காங்க.. அவங்க கண்ணுல பட்டா அவ்ளோதான்.. நேரம் வரும்.. அன்னிக்கு எல்லா இடமும் சுத்தலாம்.."

நியாயமாய் பேசினாள். பேச்சில் சமூகத்தின் மீதான அவள் பயம் தெரிந்தது. 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி நண்பன் Call பண்ணான்.

"மச்சான்.. விஷயம் கேள்விப்பட்டியா?? சஹானாக்கு Accident ஆம்.. அப்போல்லோ Hospital ல வச்சிருக்காம்."

விரைந்து ஓடினேன். அவள் முகம் வெள்ளை துணி கொண்டு மூடப்பட்டிருந்தது. நான் ரசித்த என் தேவதையின் உடலை பூத உடல் என்றார்கள். அவளுடைய அம்மா என்னிடம் வந்து கேட்டார்,

"தம்பி.. நீங்க யாரு??"

"சஹானாவோட Friend Aunty..."

அவள் பொத்தி பொத்தி வைத்த என் காதலும் அவளோடு புதைந்து போனது. எனக்கும் கடவுளுக்கும் அவளுக்கும் இடையில் நடந்த முக்கோண காதல் கதையில் கடவுள் முந்திக்கொண்டார். அதுவரை நாத்திகனான நான் அன்றுமுதல் ஆத்திகன் ஆனேன்!!!

ரகசிய உரையாடல்...

மேல் வீட்ல வாடகைக்கு இருக்கிற பொண்ணு பாவனா.. வீட்ல யாருமில்லாத நேரம் மொட்டை மாடில நின்னு பேசினோம்...

"பாவனா.. சொன்னா கேளு.. கலைச்சிரு.." நான் சொன்னன்.

"முடியாது.. என்னால கலைக்க முடியாது" அவ பிடிவாதமா பதில் சொன்னா.

"இங்க பாரு.. எங்கப்பா வேற ஊருக்கு போயிருக்கார்.. வந்தார்னா பெரிய பிரச்சினை ஆகும்.. புரிஞ்சிக்க..." மறுபடியும் கெஞ்சினேன்.

"ஒரு உயிர்னா உனக்கு விளையாட்டா போச்சா Rimaz.. உங்க அப்பா வரட்டும் நான் பேசி புரிய வைக்கிறன்.." மறுபடியும் அதே பிடிவாதம்.

"அவர் யாரு சொன்னாலும் கேக்க மாட்டாரு.. யாருக்குமே தெரியாம கலைச்சிட்றது தான் பெட்டர்.." நான் சொல்ல..

"ஓ.கே.. உனக்கு அதுதான் வேணும்னா கலைச்சிடலாம்.. ஆனா இந்த பாவத்துக்கு நீதான் காரணம்..." கண் கலங்கி விட்டாள்..

#வாசலில் குருவி கட்டிய கூட்டில் இந்தப் பெண்களுக்கு எத்தனை சென்டிமென்ட்???

Sunday, November 15, 2009

நிலவுக்கும் அவளுக்கும் அழகி போட்டி....
பகல் முழுதும் ஏற்பாடு...
கோழை நிலவு தப்பிக்கொண்டது...
இன்று அமாவாசை..

நட்ட நள்ளிரவில் கனவில் நீ வந்து புன்னகைத்தாய்.... இரவது பகலானது.... ஏனடி புன்னகைத்தாய்??? பகல் கனவு பலிக்காதாமே!!!!!!

நிழல் போல நானும்...

எனக்காய் நீ என்று
நீ சொல்ல நான் நம்பி....
ஏமாந்து நிற்கிறேன் இன்று!!!!!

இந்த நொடி
இந்த கல்லறை கூட என்னை
ஏளனம் செய்கின்றன...

பெண்ணே...
நீ என்னுடன் இருந்த வேளைகளில்...
சுவனத்தை கண்டு களித்தேன்...
ஏழை பிள்ளை அப்பத்தை காக்கை கொண்டு போவதாய்...
களித்திருந்த நொடிகளை
பிரிவெனும் நதியிலே கரைத்து நீ சென்றிட்டாய்!!!!

இந்த கல்லறையில் சாய்ந்து கொண்டு
கணீர் வடிக்கிறேன்...
உன்னை நினைத்த வேளைகளில்
என் நகங்கள் அழிக்கப்பட்டது..
அழிக்கப்படாத நிஜங்களாய்
உன் நகல்கள் மட்டும்
நெஞ்சில் வாழ்ந்து கொண்டிருக்கிறது!!!!

என்னுள் உன் பெயர் சொல்லி
உன்னை நினைவூட்டும்
நினைவுகள் மீது சத்தியமாக...

உன்னிடம் காவு கொடுத்த
என் இதயம் மீது சத்தியமாக...

என்னை
கொள்ளை கொண்டு
குழியில் தள்ளிய உன்
விழிகள் மீது சத்தியமாக....

கோடி ஆண்களை
சோடி இன்றி தவிக்க வைக்கும
பெண்கள் மீது சத்தியமாக....

ஒரு துளியேனும்
கசியாது உன் மேல் நான் வைத்த
பிரியம் என் காதல.....

பிரிக்க முடியாத
இழைகளால்...
இணைக்கப்பட்ட இதயங்களை
சொல் எனும் கோடரியால்
களைத்தெறிந்து விட்டாய்....

நீ நீயாக இருக்க
என்னை நாயாக மாற்றிய பெண்ணே....

உனக்காய் நான் கொடுத்திருந்த
ஓரிரு நிமிடங்களையேனும்
பள்ளிக்காய் கொடுத்திருந்தால்
நல்ல ஒரு பெண்ணுடன்.. நானும் இருந்திருப்பேன்....!!!!

உயிரை எடுத்து
பூக்கள் சூடி மாலை நெய்தேன்
உனக்காய்....
நீ மாலை மற்றிக்கொண்டாய்
வேறு ஒருவனுடன்.,...

என்
காதல்
மிதித்து செல்லப்படும்
வெறும் நிழல்களாய் இன்று!!!!!

அழகிய நிலவு..

இரவு பொழுதில் உறங்கி கொண்டிருக்கிறது...
இந்த அழகிய நிலவு.....
ஓரத் தாலாட்டாய் அன் நிலவின் கால் சலங்கைகள்...
நிலவது எச்சில் விழுங்குவதை கழுத்தோரத்து ரத்த குழாய்கள்
படம் பிடித்து காட்டுகின்றன.....

அழகிய நிலவில் ஒரு துவாரம்... அங்கு
முப்பத்திரண்டு வேற்று கிரக வாசிகள்....

என் கண்ணவனை கீழே பணிக்க...
நிலவதனில் இரண்டு கவிதைகள்...
அண்டம் தாண்டியும் வேக தடுப்புகளா???
பார்வை அம்புகளை இன்னும் பணிக்கிறேன்....

நிலவதன் மையத்தில்
ஒரு காயம் கூட....
ஏய் ஆம் ச்ற்றோங்கே???
போயும் போயும் இந்த நிலவிலா நீ கொடி நடுவது????
சிவந்த கண்களை இன்னும் பணிக்கிறேன்....

என்ன பார்வை.... இடம் பொருள் கருதி
இன்னும் கீழே பணிக்கிறேன்....
இரு நீள குச்சிகள் அந்த நிலவில்...
ஒவ்வொரு குச்சியிலும் ஐந்தைந்து சிறிய குச்சிகள்..

பின்னழகையும் ரசித்திருப்பேன்...
பொழுது விடியாதிருதிருந்தால்...

ஏய் சேவலே... கூவியது போதும்..
உறங்க விடுங்கள் இந்த அழகிய நிலவை....