Thursday, May 29, 2014

கோச்சடையான் விமர்சனம்...



நானும் நண்பனும் போய் தியேட்டர்ல உக்கார்ந்தோம். பொதுவாவே தலைவர் படம்னா கேக்கவா வேணும்?? அதே கூட்டம். அதே ஆரவாரம். ரஜினி படங்கள தொடர்ந்து பாக்குறதால அது பெரிய ஒரு ஆச்சர்யமா ரெண்டு பேருக்குமே படல. படம் ஆரம்பிச்சு 10 நிமிஷம் ஆச்சு. நண்பன் கிட்ட கேட்டன்

"என்ன டா இது?? சின்ன பசங்க கார்ட்டூன் மாதிரி இருக்கு.. தலைவர எதிர்பார்த்து வந்தது வேஸ்ட் டா.." அதுக்கு நண்பன் சொன்னான்

"மச்சான்.. தமிழ் சினிமாவுக்கு இந்த அனிமேஷன் புதுசு. நமக்கு பழக்கம் இல்ல. இது ஒரு அனிமேஷன் படம். அத முதல்ல நல்லா புரிஞ்சிக்கணும். ஒரு படையப்பாவையோ சந்திரமுகியையோ இங்க எதிர்பாக்க கூடாது"

"அட ஆமால்ல.. தலைவர் தலைவர் தான் டா.. என்னா ஸ்டைலு.. ஒன்னு கவனிச்சியா நாசர், சரத் குமார், நாகேஷ் எல்லா கதாப்பாதிரமும் செம்மையா பொருந்திருக்குல்ல.." ஆச்சர்யமா சொன்னன் நண்பன்கிட்ட..

"புலிக்கு பொறந்தது பூனையாகுமா டா?? தலைவர் மகள் எடுத்த படம். எல்லாமே பர்பெக்டா தானே இருக்கணும்.." நண்பன் சொன்னான்.

"இருந்தாலும் மச்சான் அனிமேஷன் இன்னும் கொஞ்சம் நல்லா செஞ்சிருக்கலாம்" அங்கலாய்த்தேன் நான்.

"ஆமா டா. எனக்கும் தோணிச்சு.. ஆனா இது ஆரம்பம் தானே மச்சி.. முதல் தடவைக்கு இது ரொம்ப அதிகம் டா.." நண்பன் விட்டுக்கொடுக்காம பேசினான்.. தொடர்ந்தும் நண்பன் சொன்னான்

"ஒவ்வொரு சீனுமே சொல்லப்பட்டிருக்க விதம் நல்லாருக்குல்ல மச்சான்?? என்ன பிரமாண்டம்.. அப்பப்பப்பா.." அவனின் வியப்பு கண்கள்ல தெரிஞ்சுது.

"என்ன டா வந்ததுலருந்து பாக்குறன்.. நம்ம ஒஸ்கார் நாயகன பத்தி ஒண்ணுமே சொல்லலையே நீ??" நான் நண்பன்கிட்ட கேட்டேன்..

"நான் என்னத்த டா சொல்ல?? மனுசனா அவன்?? இங்க பொறக்க வேண்டியவனே இல்ல டா.. நமக்கு கிடைச்ச பொக்கிஷம் அந்த ஆளு.. பாட்டென்ன.. Background Score என்ன?? சான்சே இல்ல டா"

"அதுவும் சரிதான்.."
நான் சொல்ல படமும் முடிவுக்கு வந்திச்சு. நண்பன் பேசதொடங்கினான்.

"என்னா கத என்னா இயக்கம்.. என்னா இசை.. ரஜினி ரசிகன் கண்டிப்பா பாக்கவேண்டிய படம் இல்லையா மச்சான்??" அதுக்கு நான்

"அதென்னமோ உண்மை தான்.. உனக்கு படத்துல எந்த குறையுமே இல்லையா??" கேட்டன்.

"ஏன் இல்லாம??? இந்த கதைய தலைவர் அனிமேஷன் இல்லாம நடிச்சிருந்தா இன்னும் நல்லாருந்திருக்கும்.." நண்பன் ஆவலோட சொன்னான்.

-Rimaz-

#விமர்சனம் என்ற பெயரில் கதை சொல்லி தயாரிப்பாளரை நஷ்டப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை.

No comments:

Post a Comment