Thursday, May 29, 2014

அவள் பெயர் சஹானா...

சஹானா அவள் பெயர். 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி அவளிடம் காதலை சொன்னது. உடனே "ஓ கே" சொல்லிவிட்டாள். நாட்காட்டி மட்டும் 2012 ஏப்ரல் 13 என்று நாளை காட்டியது.

"ஹேய்.. இன்னிக்கு தான் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.. Facebook ல Relationship Status Update பண்ணட்டுமா??" அந்த சந்தோஷத்தில் நான் கேட்ட கேள்வி.

"லூசா உனக்கு??? வேணாம்ப்பா.. என்னோட அண்ணா அக்கா ரெண்டு பேரும் அதுல இருக்காங்க... பாத்தா அவ்ளோதான்..." கண்களால் கெஞ்சினாள்.

"சஹானா... நம்ம Love அ என் Friends கிட்ட சொல்லட்டுமா??" ஏக்கத்தோடு கேட்டேன்.

"டேய் இப்போ உனக்கு என்ன பிரச்சன?? வேணாம் டா.. அப்புறம் அவங்கெல்லாம் என்ன ஒருமாதிரி பாப்பாங்க.. என் Friends க்கு தெரிஞ்சா வீட்ல சொல்லிருவாங்க.." செல்லமாய் சிணுங்கினாள்.

ஒரு பண்டிகை நாள்...

"வாரியா ஷாப்பிங் போவோம்???" அன்பான கட்டளை விடுத்தேன்.

"விளையாடறியா நீ??? எங்க பாத்தாலும் என் சொந்தக்காரங்க இருக்காங்க.. அவங்க கண்ணுல பட்டா அவ்ளோதான்.. நேரம் வரும்.. அன்னிக்கு எல்லா இடமும் சுத்தலாம்.."

நியாயமாய் பேசினாள். பேச்சில் சமூகத்தின் மீதான அவள் பயம் தெரிந்தது. 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி நண்பன் Call பண்ணான்.

"மச்சான்.. விஷயம் கேள்விப்பட்டியா?? சஹானாக்கு Accident ஆம்.. அப்போல்லோ Hospital ல வச்சிருக்காம்."

விரைந்து ஓடினேன். அவள் முகம் வெள்ளை துணி கொண்டு மூடப்பட்டிருந்தது. நான் ரசித்த என் தேவதையின் உடலை பூத உடல் என்றார்கள். அவளுடைய அம்மா என்னிடம் வந்து கேட்டார்,

"தம்பி.. நீங்க யாரு??"

"சஹானாவோட Friend Aunty..."

அவள் பொத்தி பொத்தி வைத்த என் காதலும் அவளோடு புதைந்து போனது. எனக்கும் கடவுளுக்கும் அவளுக்கும் இடையில் நடந்த முக்கோண காதல் கதையில் கடவுள் முந்திக்கொண்டார். அதுவரை நாத்திகனான நான் அன்றுமுதல் ஆத்திகன் ஆனேன்!!!

No comments:

Post a Comment